தேனி அருகே ஓலைச்சுவடிகள் கண்டுபிடிப்பு
3/5/2021 2:50:16 AM
தேனி, மார்ச் 5: தேனி அருகே பழங்கால ஓலைச்சுவடிகள் கோயில் சுவருக்குள் இருந்து கிடைத்துள்ளது. தேனி அருகேயுள்ளது அம்மச்சியாபுரம் கிராமம். இங்கு வேட்டுவன்குல பூர்வீக குடிமக்கள் 68 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சுமார் 15 தலைமுறைக்கு முன்னதாக அம்மச்சியாபுரம் வந்து விவசாய தொழில் புரிந்து வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இவ்வூரின் நடுவே வேட்டைகருப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயில் நிர்வாகியாக பூசாரி ஈஸ்வரன் இருந்து வருகிறார். மிகப்பழமையான இக்கோயிலை ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி துவங்கியது.
இப்பணிக்காக நேற்று, கோயிலின் ஒரு பக்க சுவற்றை இடித்தனர் அப்போது சுவற்றிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பழமையான ஓலைச்சுவடிகள் கிடைத்தன. சுமார் 100 ஓலைகள் கொண்ட சுவடிகள் இருந்ததையறிந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், ‘ஓலைச்சுவடி குறித்து தொல்லியல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளோம். ஓலைச்சுவடிகளில் உள்ள தமிழ் எழுத்துக்கள் சற்று புரியாத வகையில் உள்ளது. இதனை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தால்தான் எதற்காக இந்த ஓலைச்சுவடியை பாதுகாக்க சுவற்றிற்குள் மறைத்து வைத்தனர். இந்த ஓலைச்சுவடிக்குள் என்ன கருத்து புதைந்து கிடக்கிறது என்பது தெரியவரும்’ என்றனர்.
மேலும் செய்திகள்
கம்பம் மூதாட்டி மர்மச்சாவில் திருப்பம் குடிபோதையில் பலாத்காரம் செய்து கொன்ற கொடூர வாலிபர் கைது போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
செவிலியர் தூக்கிட்டு தற்கொலை
வருசநாடு அருகே சின்னசுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
கடமலை-மயிலை ஒன்றியத்தில் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை
டிஎஸ்பி தலைமையில் கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம்
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!
22-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்