வியாபாரிகளிடம் ரூ.6 லட்சம் பறிமுதல்
3/5/2021 2:45:52 AM
பரமக்குடி, மார்ச் 5: தமிழகத்தில் ஏப். 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 3 பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பரமக்குடி அருகே பார்த்திபனூரில் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடலூர் மாவட்டத்திலிருந்து பரமக்குடி ஆட்டுச்சந்தை ஆடுகளை வாங்க வந்த வியாபாரிகளின் வாகனத்தை சோதனையிட்ட போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட தொகை 5 லட்சத்து 65 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்துக்குமார் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடலூரை சேர்ந்த ஆட்டு வியாபாரிகள் துரைராஜ், ஆனைமலை, கண்ணன் ஆகிய மூவரிடம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் பகுதியை சேர்ந்த ஆட்டு வியாபாரி பாக்கியம் என்பவரிடமிருந்து ரூ.73 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் பறிமுதல் செய்யப்பட்ட 6 லட்சத்து 38 ஆயிரத்து 300 ரூபாய் பணம் பரமக்குடி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
கொரோனா தடுப்புக்கு ஆலோசனை மையத்தை தொடர்பு கொள்ளலாம்
கல்வெட்டு படிக்க பயிற்சி
குடிநீர் கிடைக்காமல் குளத்து தண்ணீரை குடிக்கும் கிராமமக்கள் தொற்று நோயால் அவதி
சாலையில் தேங்கிய மணலால் விபத்து
கராத்தேயில் மாணவர்கள் சாதனை
ஏர் பூட்டும் விழா கொண்டாட்டம்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்