தேர்தலால் கோவில் விழாக்களுக்கு அரசியல் கட்சியினர் தாராள நன்கொடை
3/4/2021 3:56:30 AM
சிவகங்கை, மார்ச் 4: சட்டமன்ற தேர்தலால் கோவில் விழாக்களுக்கு அரசியல் கட்சியினர் தாராள நன்கொடை அளித்து வருகின்றனர். ஏப்.6ல் தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் கட்சியினர் ஓர் இடத்தில் கூட்டம் நடத்துவது, சாப்பாடு உள்ளிட்ட செலவுகள் செய்தாலும் அனைத்தும் தேர்தல் கணக்கில் வரும். இந்நிலையில் கட்சியினரை கவர்வதை விட பொதுமக்களை கவர்வதில் போட்டா போட்டி நிலவுகிறது. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மகத்திருவிழா, பங்குனி மாதம் அனைத்து ஊர்களில் உள்ள மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களுக்கு திருவிழாக்கள் நடப்பது வழக்கம். தெருக்களில் உள்ள சிறிய கோவில்களுக்கும் பெரிய அளவில் திருவிழாக்கள் நடத்தப்படும். தீச்சட்டி ஏந்துதல், பூக்குழி இறங்குதல், அலகு குத்துவது, பால் குடம் எடுத்தல் என பக்தர்களின் வேண்டுதல் நிகழ்ச்சிகளோடு, கலை நிகழ்ச்சிகளும் களை கட்டும்.
குறிப்பிட்ட ஒரு பகுதியில் உள்ளவர்கள் மட்டும் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு விழா எடுப்பர். இதற்காக அப்பகுதியில் உள்ளவர்களிடம் நன்கொடை வசூல் செய்து விழா நடத்துவர். இந்நிலையில் தேர்தல் வர இருப்பதையொட்டி இதுபோன்ற கோவில் விழாக்களுக்கு அரசியல் கட்சியினர் தாராளமாக நன்கொடை வழங்கி வருகின்றனர். சில நூறுகளில் இத்தனை ஆண்டுகள் நன்கொடை வழங்கி வந்தவர்கள் ஆயிரக்கணக்கில் கொடுக்கின்றனர். விழாவில் முக்கிய நிகழ்ச்சி அல்லது உணவு வழங்குதல் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை தாங்களே செலவு செய்து நடத்துவதாக பொறுப்பேற்று கொள்கின்றனர். இதில் ஆளும் கட்சியினர் முன்னிலை வகிக்கின்றனர். விழா நடத்துபவர்களே மறந்துவிட்டாலும் வலியப்போய் நன்கொடை வழங்குவதும் நடக்கிறது.
கோவில் பொறுப்பாளர் ஒருவர் கூறியதாவது,‘தேர்தல் வர இருப்பதால் அப்பகுதி மக்களின் வாக்குகளை கவர இதுபோல் செய்கின்றனர். ஏற்கனவே அறிமுகமான கட்சியினர் அப்பகுதியில் விழா நடக்கும் அன்று முழுவதுமாக தானே பொறுப்பேற்று விழா நடத்துவது போல் காட்டிக்கொள்கின்றனர். கடந்த ஆண்டுகளில் நன்கொடையாக எழுதிய பணத்தை வாங்கவே பல மாதம் அலைய வேண்டும். தற்போது அவர்களாகவே கூப்பிட்டு தருகின்றனர். அனைத்து கட்சிகளும் இதுபோல் செய்தாலும் ஆளும் கட்சியினரே இதுபோல் அதிக பணம் செலவு செய்கின்றனர் என்றார்.
மேலும் செய்திகள்
சம்பிரதாயத்திற்காக கணக்கெடுப்பு செயல்படாத மழைநீர் சேமிப்பு தொட்டி மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீர்
மகசூலை பாதிக்கும் வகையில் கத்தரியில் நோய் தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை
105 லிட்டர் ‘கள்’ பறிமுதல்
வேட்டையன்பட்டியில் சேதமடைந்து கிடக்கும் சமுதாயக்கூடம் சீரமைக்க வலியுறுத்தல்
பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்த பயிற்சி
சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆற்றில் இறங்கினார் திருமால் அழகர்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்