மதுபாட்டில் கடத்தலை தடுக்க நடவடிக்கை
3/4/2021 3:56:23 AM
சிவகங்கை, மார்ச் 4: சிவகங்கை மாவட்டத்தில் மதுபாட்டில்கள் விற்பனை கடத்தல்களை தடுக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம சார்பில் தெரிவித்துள்ளதாவது, சிவகங்கை மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள நிலையில் திருட்டுத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை, மதுபான பாட்டில்கள் கடத்தல்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் மற்றும் மதுபானக் கடைகளில் தினசரி விற்பனையை கண்காணிக்கவும், மதுபானம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை டாஸ்மாக் உதவி மேலாளர் வேலுமணி கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையிலும் மற்றும் சிவகங்கை டாஸ்மாக் உதவி மேலாளர் முகம்மதுசெரீப் பறக்கும் படையிலும் மதுபான கடத்தல்களை கண்காணிக்கும் வகையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பில் ஈடுபடுவர். மதுபான கடத்தல் தொடர்பான புகார்களை 88384 49760 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சம்பிரதாயத்திற்காக கணக்கெடுப்பு செயல்படாத மழைநீர் சேமிப்பு தொட்டி மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீர்
மகசூலை பாதிக்கும் வகையில் கத்தரியில் நோய் தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை
105 லிட்டர் ‘கள்’ பறிமுதல்
வேட்டையன்பட்டியில் சேதமடைந்து கிடக்கும் சமுதாயக்கூடம் சீரமைக்க வலியுறுத்தல்
பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்த பயிற்சி
சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆற்றில் இறங்கினார் திருமால் அழகர்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்