SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக மகா நடிப்புடா சாமி.. டெபாசிட் தொகைக்கு ₹1 வசூலிக்கும் தாமரை

3/3/2021 5:35:53 AM

புதுச்சேரிக்கு பொதுக்கூட்டத்துக்கு வந்த பிரதமர் மோடி,. பாஜக தலைவரை பார்த்து வெரி பாப்புலர் எம்எல்ஏ சாமிநாதன் என அழைத்தார். அப்போது அவரது முகத்தில் ஆயிரம் வோல்ட் பிரகாசம், அதோடு பெருமையோடு ஒரு சிரிப்பு இந்த வீடியோவை பலரும் பார்த்திருப்பார்கள். கடந்த தேர்தலில் லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட சாமிநாதன் 1429 வாக்குகளை பெற்று டெபாசிட் இழந்தார். அன்று முதல் லாஸ்பேட்டையில் சாமிநாதன் பிரபலமாகிவிட்டார்.  தேர்தலில் தோல்வியடைந்தாலும், அதிர்ஷ்ட காற்று அவர் மீது வீசியது. மத்திய அரசு திடீரென அவரை நியமன எம்எல்ஏ வாக்கியது. இருப்பினும் தேர்தலில் வெற்றிப்பெற்றுவிட வேண்டும் என்ற ஆசை  மட்டும் விட்டுவிடவில்லை. இதற்காக கருங்காலி கட்டை மந்திரக்கோலுடன் அமைச்சர் கனவில் சுற்றி வருகிறார். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே பிரசாரத்தை துவக்கி சாலை முழுவதும் தாமரையை வரைந்து, மகளிருக்கு அண்டா, குண்டா பரிசு கொடுத்து கவர் செய்தார்.

ஆனாலும் வரும் தேர்தலில் லாஸ்பேட்டையில் அவருக்கு சீட் உறுதியா? என்பது தற்போதுவரை தெரியவில்லை. அங்கு சிவக்கொழுந்துவின் தம்பி ராமலிங்கம் போட்டியிடலாம் என்ற தகவலும் வெளியாகி வருகிறது. நிச்சயமாக கூட்டணியில் லாஸ்பேட்டையை பெற்றுவிட வேண்டுமென சாமிநாதனும், அவர்களது ஆதரவாளர்களும் தீயாய் வேலை செய்கின்றனர்.இதற்கிடையே வரும் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கலுக்கான டெபாசிட் தொகை ரூ. 25 ஆயிரத்தை பொதுமக்களிடமிருந்துதான் வசூலிக்க வேண்டும் என தலைவர் கட்டளையிட்டு இருக்கிறாரராம். தொகுதி மக்களின் பங்களிப்போடுதான் நாம் பணியை துவக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் ரூ. 1 மக்களிடம் பெறுவதற்காக பாஜக நிர்வாகிகள் உண்டியல் ஏந்தி வசூலிக்கின்றனர்.இது போன்று புதுச்சேரியில் யாரும் செய்தது இல்லை என பெருமையாக கூறுகின்றனர். ஆனால் ஏற்கனே ஏனாம் தொகுதியில் முதன்முதலாக மல்லாடி கிருஷ்ணாராவ் போட்டியிடும் போது டெபாசிட் தொகைக்கு தேவையான பணத்தை மக்களே கொடுத்திருக்கின்றனர்.இதே வழியை பாஜகவும் கையில் எடுத்துள்ளது. இது எந்தளவுக்கு வெற்றிபெறும் என்பதை தேர்தல் முடிவுகளில் தெரியும். இந்த முறையாவது டெபாசிட் தொகையை தக்க வைத்துக்கொள்ளும் முனைப்பில் பாஜக பணியாற்றுகிறதாம். ஆனால் இதனை பார்த்து எதிர்கட்சிகள் எப்பா உலக மகா நடிப்புடா சாமி...  என கமெண்ட் அடிப்பதோடு, இந்தா ரூ. 1 என உண்டியலில் போட்டுவிட்டு நடையை கட்டுகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • oxygen-22

  ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

 • oxyyge11

  ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!

 • koronaasadaaa1

  குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!

 • black-girl22

  அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!

 • 22-04-2021

  22-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்