SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமூர்த்தி அணை நீர்மட்டம் சரிவு

3/1/2021 4:14:03 AM

உடுமலை, மார்ச் 1: திருமூர்த்தி அணை நீர்மட்டம் 39 அடியாக சரிந்துள்ளது. உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60 அடி உயரம் கொண்டது. பரம்பிக்குளம் அணையில் இருந்து சர்க்கார்பதி மின் நிலையம் வழியாக, கான்டூர் கால்வாய் மூலம் அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது. இதுதவிர, பாலாறு வழியாகவும் அணைக்கு நீர் வருகிறது. இந்த அணையின் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பிஏபி திட்டத்தில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. அணையில் இருந்து உடுமலை நகர் மட்டுமின்றி, பல்வேறு கிராமங்களுக்கும் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.

3ம் மண்டலத்துக்கு கடந்த ஜனவரி 11ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. மொத்தம் 4 சுற்றில், 2 சுற்று தண்ணீர் நிறைவடைந்துள்ளது. 3ம் மண்டலத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டபோது அணையில் நீர்மட்டம் 58 அடியாக இருந்தது. தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது. நீர்மட்டம் நேற்று 39.78 அடியாக இருந்தது. நீர்வரத்து 843 கனஅடியாக இருந்தது. 207 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 09-05-2021

    09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-05-2021

    07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்