டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
2/26/2021 3:45:18 AM
நாகர்கோவில், பிப்.26: நாகர்கோவிலில் டாஸ்மாக் ஊழியர்கள் பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். டாஸ்மாக்கில் 18 ஆண்டுகள் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வரும் பணியாளர்களின் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், அரசுத்துறையில் மாற்றுப்பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் போலீசார் உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து டாஸ்மாக் ஊழியர்கள் அதே இடத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தொமுச மாவட்ட தலைவர் ஷாபு, சிஐடியு மாவட்ட செயலாளர் அசோக்குமார், ஏஐடியுசி மாவட்ட தலைவர் ஜோதி, நடேசன், அருள் ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடியு மாவட்ட தலைவர் தங்கமோகன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, சந்திரசேகர் குமார்ஆகியோர் பேசினர். மால்ட்டன் ஜினின், பத்மநாபன், சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நாகர்கோவில் மாநகர திமுக செயலாளர் வக்கீல் மகேஷ் போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.
மேலும் செய்திகள்
கொரோனா பாதித்தவர்கள் டாக்டர் அனுமதி இருந்தால் மட்டுமே வீடுகளில் இருந்து சிகிச்சை பெற முடியும் ஆணையர் ஆஷாஅஜித் பேட்டி
சிங்கப்பூர் சரக்கு கப்பல் உரிமையாளரிடம் இருந்து ₹100 கோடி நஷ்டஈடு பெற வேண்டும் மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 18,403 ஆக உயர்வு நாகர்கோவிலில் இதுவரை 4800 பேருக்கு தொற்று
வருமா, வராதா என தெரியாமல் குமரியில் தடுப்பூசி மையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள் 2வது டோஸ் போட வேண்டிய தேதி கடந்ததால் பீதி
கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் வழங்கியதில் முறைகேடு
பிளஸ் 2 செய்முறை தேர்வில் பணியாற்றிய ஆசிரியருக்கு கொரோனா
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்