மாற்றுத்திறனாளிகள் 20 பேர் கைது
2/26/2021 3:41:52 AM
நாகர்கோவில், பிப்.26: கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் வழங்குவது போன்று மாற்றுத் திறனாளிகளின் மாத உதவித் தொகையை R3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கடுமையான ஊனமுற்றோருக்கு R5 ஆயிரம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016-ன் படி தனியார் துறைகளில் 5 சதவீத பணிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நடத்த முயற்சி செய்து வருகின்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் இரண்டாவது கட்டமாக மீண்டும் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது நாளாக நேற்றும் போராட்டம் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் தங்க குமார் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர் மனோகர ஜஸ்டஸ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் குமார், அருள், நிர்வாகிகள் கணபதி, மிக்கேல் ஆகியோர் பேசினர். மாற்றுத்திறனாளிகள் கையில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கலெக்டர் அலுவலகம் நோக்கி செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்துநிறுத்தி 20 பேரை கைது செய்தனர். இதனை போன்று விளவங்கோடு தாலுகா அலுவலகம் முன்பும் போராட்டம் நடைபெற்றது.
மேலும் செய்திகள்
2,000 டோஸ் நெல்லையில் இருந்து வரவழைப்பு குமரியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீடிப்பு
கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு குமரிக்கு தேவையான தடுப்பூசிகளை அனுப்பாவிட்டால் போராட்டம்
நண்பர்களுடன் குளித்த போது மணக்குடி கடலில் மாயமான மாணவர் சடலமாக மீட்பு
இ-பாஸ், சளி பரிசோதனை தொடக்கம் குமரி- கேரள எல்லையில் கட்டுப்பாடுகள் அமல் 12 செக்போஸ்ட்களிலும் போலீஸ் குவிப்பு
குமரியில் மளமளவென அதிகரித்த தொற்று கொரோனா சிகிச்சையில் 9 குழந்தைகள், 4 கர்ப்பிணிகள் இளம்பெண் உயிரிழந்தது எப்படி? உருக்கமான தகவல்கள்
கொரோனா பாதித்தவர்கள் டாக்டர் அனுமதி இருந்தால் மட்டுமே வீடுகளில் இருந்து சிகிச்சை பெற முடியும் ஆணையர் ஆஷாஅஜித் பேட்டி
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!
22-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்