சிவகாசி சப்ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் பணம் வசூல் பொதுமக்கள் புகார்
2/26/2021 2:56:55 AM
சிவகாசி, பிப்.26: சிவகாசி சப்ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சிவகாசியில் சப்ரிஜிஸ்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சிவகாசி தாலுகாவிற்கு உட்பட்ட காலியிடங்கள், விளைநிலங்கள், வீட்டுமனைகள் மற்றும் திருமணபதிவு பணி மேற்கொள்ளப்படுகிறது. இங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணப்பதிவும் நடக்கிறது. சார்பதிவாளர், கண்காணிப்பாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், அலுவலர்கள் பணிபுரிகின்றனர்.விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி சப்ரிஜிஸ்டர் அலுவலகத்தில் தான் அதிக வருவாய் ஈட்டப்படுகிறது. முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணமாக ஆண்டுக்கு ரூ.3 கோடி வரை வருவாய் கிடைக்கிறது. தவிர திருமணபதிவு, வாடகை ஒப்பந்தம், கட்டிட ஒப்பந்தம் போன்ற பதிவின் மூலமாகவும் வருவாய் கிடைத்து வருகிறது. சிவகாசி சப்ரிஜிஸ்டர் அலுவலகத்தில் ஆவணப்பதிவுக்கு கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வீட்டுமனைகளை பதிவு செய்ய ஒரு பிளாட்டுக்கு ரூ.2 ஆயிரம் வரை கூடுதலாக பெறப்படுவதாக புகார் கூறுகின்றனர்.
இதே போன்று அனைத்து பதிவிற்கும் எழுத்தர்கள் மூலம் பொதுமக்களிடம் அதிக பணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு ஏற்கனவே வழிகாட்டு மதிப்பை உயர்த்தியதால் அதிக முத்திரை கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது. இந்த நிலையில் கூடுதல் பணம் கேட்பதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். சிவகாசியில் தற்போது ரியல் எஸ்டேட் தொழில் மீண்டும் சூடு பிடித்துள்ளது. இதனால் சப்ரிஜிஸ்டர் அலுவலகத்தில் கூட்டம் அதிமாக உள்ளது. இதனை பயன்படுத்தி அதிகாரிகள் சிலர் பொதுமக்களிடம் கூடுதலாக பணத்தை கறப்பதில் குறியாக உள்ளனர். எனவே சிவகாசி சப்ரிஜிஸ்டர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி கையூட்டு பெறும் அதிகாரிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா 2வது அலை அபாயம் கோவிசீல்டு தடுப்பூசி பூஜ்யம் கோவாக்சின் 6 ஆயிரம் டோஸ்
சுகாதாரத்துறை அதிகாரிகள் திணறல் ஆற்று பாலத்தில் தடுப்புச்சுவர் சேதம்
விருதுநகர் அருகே பயன்படுத்தாமலே பாழான ரேஷன் கடை
மாவட்டத்தில் தொடர்மழையால் அழுகிய பல ஏக்கர் தக்காளி செடிகள்
ராஜபாளையம் அருகே கண்மாயில் திடீரென நிறம் மாறிய மழைநீர்
கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றும் அவலம் அருப்புக்கோட்டை மக்கள் பீதி
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்