பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
2/26/2021 2:56:36 AM
சாத்தூர், பிப்.26: பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் சதுரகிரி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் ஞனஒளி, மனிமாறன் முன்னிலை வகித்தார்கள். தேர்தல் பொறுப்பாளர் சந்திரன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது, பட்டாசு தொழில் பாதுகாப்பாக நடைபெற தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்தி கோரிக்கை விடுத்தனர். மேலும் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சமும், காயம் அடைந்தவருக்கு ரூ.5 லட்சமும் நிவாரணம் வழங்க வேண்டும். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கண்காணிக்க தவறும் அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு குறித்த பயிற்சி வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் பி.எப், இ.எஸ்.ஐ மற்றும் குரூப் இன்ஷூரன்ஸ் உள்ளிட்டவை முறையாக வழங்கப்படுகிறதா என்பதை முறைப்படுத்த வேண்டும். மாற்றுத் தொழிலுக்குச் செல்லும் வகையில் சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை பகுதிகளில் சிப்காட், சிட்கோ தொழிற்பேட்டைகளை அமைத்து தொழிலாளர்களின் நலன் காக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
மேலும் செய்திகள்
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா 2வது அலை அபாயம் கோவிசீல்டு தடுப்பூசி பூஜ்யம் கோவாக்சின் 6 ஆயிரம் டோஸ்
சுகாதாரத்துறை அதிகாரிகள் திணறல் ஆற்று பாலத்தில் தடுப்புச்சுவர் சேதம்
விருதுநகர் அருகே பயன்படுத்தாமலே பாழான ரேஷன் கடை
மாவட்டத்தில் தொடர்மழையால் அழுகிய பல ஏக்கர் தக்காளி செடிகள்
ராஜபாளையம் அருகே கண்மாயில் திடீரென நிறம் மாறிய மழைநீர்
கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றும் அவலம் அருப்புக்கோட்டை மக்கள் பீதி
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்