அண்ணா மேம்பாலம் அருகே நள்ளிரவில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: சிசிடிவி காட்சி மூலம் 3 பேருக்கு வலை
2/23/2021 5:39:56 AM
சென்னை: சென்னை அண்ணா மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின் தொடர்ந்து வந்த 3 வாலிபர்கள் திடீரென அந்த பெண்ணை வழிமறித்து அண்ணா மேம்பாலத்தின் கீழ் பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளனர். அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் சம்பவம் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை பார்த்த 3 வாலிபர்களும் இளம்பெண்ணை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
மேம்பாலத்தின் கீழ் வெளிச்சம் இல்லாத இடத்தில் அதிர்ச்சியில் உறைந்த நிலையில், உடல் முழுவதும் சீராய்ப்புகளுடன் அழுதுகொண்டிருந்த இளம்பெண்ணை மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பிறகு அவரிடம் நடத்திய விசாரணையில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியை சேர்ந்தவர் என்றும், வேலை தொடர்பாக சென்னை வந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரை காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
குப்பை லாரி சிறைபிடிப்பு
மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது
தாமதமாக வந்ததால் வாத்து நடை தண்டனை மாணவன் பலியான விவகாரத்தில் தந்தைக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
ஜிஎஸ்டி செலுத்தாத வியாபாரியிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய வரித்துறை அதிகாரி கைது
காதலனுக்கு வேறு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய காதலி
சென்ட்ரல் ரயில் நிலையம், அம்பத்தூர், தாம்பரத்தில் ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.5.95 லட்சம் பறிமுதல்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!