வருவாய்த்துறை போராட்டம் திருவாடனையில் சான்றிதழ் பெற முடியாமல் மக்கள் தவிப்பு
2/21/2021 4:10:12 AM
திருவாடானை, பிப். 21: வருவாய்த்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தை அறிவித்து நடத்தி வருகின்றனர். இதனால் கடந்த 17ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தை அடுத்து திருவாடானை தாலுகா அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. இதனால் சாதி, வருமானம், இருப்பிடம், விதவைச்சான்று, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் போன்ற அனைத்து பணிகளும் முடங்கிக் கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் சான்று கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு சான்று பெற முடியாமல் தவித்து வருகின்றனர். திருவாடானை தாலுகாவில் மட்டும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். எனவே அரசு உடனடியாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து அனைவருக்கும் தடையின்றி சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
100 ஆண்டுகளாக தொடரும் சமூக நல்லிணக்கம் மொஹரத்தையொட்டி பூக்குழி இறங்கிய இந்துக்கள்
தண்ணீரை அதிகளவு சேமிக்க பருவமழைக்கு முன்பே கண்மாய்கள் தூர்வார வேண்டும்
வாலிபர் மீது தாக்குதல்
ஆன்லைனில் பணம் இழப்பை தடுக்க விழிப்புணர்வு வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ஏ.புனவாசல் பஞ்சாயத்தில் தினமும் குடிநீர் வழங்க வேண்டும் கிராமமக்கள் வலியுறுத்தல்
பரமக்குடியில் நெசவாளர்களுக்கு ரூ.14 லட்சம் கடன்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...