அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்
2/16/2021 5:24:28 AM
திருச்சி, பிப். 16: தமிழகத்தில் நடைபெறவுள்ள 2021 சட்டமன்ற பொது தேர்தலை எதிர்கொள்வது குறித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி பட்டறை, திருச்சியில் நடந்தது. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக மண்டல பொறுப்பாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான தங்கமணி வழிகாட்டுதலின்படி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் தனியார் தகவல் தொழில்நுட்ப மென்பொருள் நிறுவனங்களை சேர்ந்த வல்லுனர் குழுவினரால் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. இதில் தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம், தேவை, தொழில்நுட்பத்தை கையாள்வது, தமிழக அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் எவ்வாறு கொண்டு செல்வது, தொழில்நுட்பம் சார்ந்த புதுப்பிக்கப்பட்ட கணினி மென்பொருட்கள் கையாள்வது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.முன்னதாக நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலை தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனையை அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் வழங்கினார்.
அதைதொடர்ந்து மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 73வது பிறந்த தினத்தையொட்டி சமூக வலைதளங்கள் வாயிலாக அவரது அழியா புகழை அகிலமெங்கும் எடுத்து செல்வது. தலைமை அறிவிக்கும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு நன்றி தெரிவிப்பது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான மக்கள் நலத்திட்ட சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மணப்பாறை எம்எல்ஏ சந்திரசேகர், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணைத்தலைவர் தர் ராவ், மாவட்ட செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
அதிகாரிகள் திடீர் ஆய்வில் அதிரடி சிறைவாச ரவுடிகள் இருவருக்கு குண்டாஸ்
ஜி.ஹெச் வளாகத்தில் முதியவர் சடலம் மீட்பு
நர்சிங் மாணவி தற்கொலை
மயங்கி விழுந்து காவலாளி சாவு
திருச்சி மாவட்டத்தில் 8.3 டன் விதைகள் விற்க தடை விதிப்பு
பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!