பணம் இல்லாததால் கொள்ளையர்கள் ஆத்திரம்: டாஸ்மாக் கடை உடைத்து 60 ஆயிரம் மதுபானங்கள் அபேஸ்: வாலாஜாபாத் அருகே பரபரப்பு
2/12/2021 1:12:02 AM
வாலாஜாபாத்: டாஸ்மாக் கடையை உடைத்து 60 மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் வாலாஜாபாத் அருகே பரபரப்பு ஏற்பட்டது. வாலாஜாபாத், பச்சையம்மன் கோயில் அருகே ஒரு டாஸ்மாக் கடை இயங்குகிறது. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து ஊழியர்கள், 11 மணியளவில் கடையை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலையில், அங்கு காலி பாட்டில் எடுக்க வந்த சிலர், டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது, நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், டாஸ்மாக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கிருந்த கல்லா பெட்டியில், 6,500க்கு சில்லறை காசுகளாக இருந்தன. இதனால் விரக்தியடைந்த அவர்கள், சில்லறை காசுகளை எடுத்து கொண்டு, கடையில் இருந்த 60 ஆயிரம் மதிப்பில் உயர்ரக முழு மதுபாட்டில்கள் கொண்ட 10 அட்டை பெட்டிகளை எடுத்து கொண்டு சென்றனர்.
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், இங்கு அதை ஏன் பொருத்தவில்லை என ஊழியர்களிடம் விசாரிக்கின்றனர். அதேநேரத்தில், இரவு நேரத்தில் சிலர் கடை அருகில் இரவு நேரத்தில் தூங்குவது தெரிந்தது. அவர்கள், நேற்று ஏன் அங்கு வரவில்லை. இரவு நேரத்தில், டாஸ்மாக் கடை அருகில் தூங்குபவர்கள் யார் என தீவிரமாக விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்
கடுக்கலூர் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
காஸ் குடோன் தீவிபத்து சிகிச்சை பலனின்றி உரிமையாளர் பலி
முதல் கணவருக்கு பிறந்த குழந்தைக்கு சிகரெட்டில் சூடு வைத்து சித்ரவதை: தாய், 2வது கணவன் கைது
குன்றத்தூர் பகுதிகளில் குட்கா கடத்திய 3 பேர் கைது
காஸ் குடோன் தீ விபத்து விவகாரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கைது: தலைமறைவானவர்களை தேடி வரும் போலீஸ்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!