குலசேகரத்தில் பரபரப்பு ஓடும் பஸ்சில் செல்போன் திருடிய டிப்டாப் பெண்கள்
1/29/2021 4:12:14 AM
குலசேகரம், ஜன.29: குலசேகரத்தில் இருந்து அழகியமண்டபம், திங்கள்நகர் வழியாக குளச்சல் செல்லும் தடம் எண் 332 பஸ் நேற்று பகல் 12 மணியளவில் குலசேகரம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. நேற்று முகூர்த்த நாள் என்பதால் பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அப்போது முன்பக்கம் பெண்கள் அமரும் பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க 2 இளம் பெண்கள் இருந்தனர். அதிக மேக்கப், நவநாகரீக உடையில் இருந்தனர்.
இந்த நிலையில் பஸ்சில் பயணம் செய்த 2 பேர் தங்களது செல்போன் மற்றும் பேக்கை காணவில்லை என கூச்சலிட்டனர். இதனால் பஸ்சில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது இந்த 2 பெண்களின் நடவடிக்கையில் வித்தியாசம் தெரிந்தததால் சந்தேகம் அடைந்த சக பயணிகள் அந்த பெண்களின் பேக்குகளை சோதனையிட்டனர். அப்போது அதில், மாயமான பேக் மற்றும் செல்போன் இருந்தது.
இதையடுத்து டிரைவர் பஸ்சை செருப்பாலூர் பகுதியில் நிறுத்தினார். அப்போது சக பயணிகள் அந்த 2 பெண்களையும் சரமாரியாக தாக்கினர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து பஸ்சில் இருந்து இறங்கி இருவரும் சானல்கரை வழியாக ஓட்டம் பிடித்தனர். அப்போது திருடன் திருடன் என கத்தியதால் அங்கு ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் அந்த பெண்ணைகளை துரத்தி சென்றனர். இதற்கிடையே திருட்டுபோன பொருட்கள் கிடைத்துவிட்டதால் பஸ் புறப்பட்டு சென்றது.
இது குறித்து குலசேகரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து கல்லடிமாமூடு பகுதியில் வைத்து 2 பெண்களையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் நாகர்கோவில் ஒழுகினசேரியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. ஆனால் அவர் மீது புகார் கொடுக்க யாரும் இல்லாததால் போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகள்
நவம்பர் மாதம் மாநகராட்சி புதிய கட்டிடத்தை முதல்வர் திறந்து வைக்கிறார்
ஆயுஷ் பயன்பாடு குறித்த மாதிரி கணக்கெடுப்பு
108 கிலோ புகையிலை பறிமுதல்
என்ட் டூ என்ட் பஸ்கள் மீண்டும் கண்டக்டர் இல்லாமல் இயக்கம்
வட கிழக்கு பருவமழை, சபரிமலை சீசன் எதிரொலி குமரி வன பகுதியில் யானை கூட்டங்கள் வர வாய்ப்பு
கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் திடீர் தாழ்வு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!