3 பள்ளிகளுக்கு விருது வழங்கல்
1/28/2021 4:23:06 AM
புதுக்கோட்டை, ஜன. 28: தமிழக அரசின் தொடக்க கல்வித்துறை சார்பில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கற்றல், கற்பித்தலில் மேம்பாடு, புதுமைகளை கையாளுதல், தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி, மாணவர் சேர்க்கை, போட்டிகளில் பங்கேற்பு, சுகாதாரம், அறிவியல் படைப்புகளை உருவாக்குதலில் புலமை உள்ளிட்டவற்றோடு பள்ளியின் போதுமான அளவுக்கு உள்கட்டமைப்பு வசதியை கொண்டுள்ள தலா 3 பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் சிறந்த பள்ளிக்கான விருது அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2018-19ம் ஆண்டுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் தட்டாமனைப்பட்டி மற்றும் குன்றாண்டார்கோவில் ஒன்றியம் ஒடுக்கூர் ஆகிய அரசு நடுநிலைப்பள்ளிகள் மற்றும் திருவரங்குளம் ஒன்றியம் எம்.ராசியமங்கலம் அரசு தொடக்கப்பள்ளிக்கு விருது வழங்கப்பட்டது. சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட இந்த விருதுகளை தேர்வு செய்யப்பட்ட 3 பள்ளிகளுக்கு புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் உமா மகேஸ்வரி நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்கள் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
கொரோனாவை தடுப்போம் ஓவிய போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் விழா
பொன்னமராவதி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன்நகை, பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலை
வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுடன் கலந்துரையாடல்
கண்ணனூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.63 லட்சம் வசூல்
இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!