ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து நாட்டுப்படகு மூலம் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் தொழில்
1/28/2021 4:22:53 AM
அறந்தாங்கி, ஜன. 28: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து நாட்டுப்படகு மூலம் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களில் கிளிட்டாஸ், ஆரோக்கியம், சேசுப்பிள்ளை, சன்ராஜ், பிராங்கிளின், கிரீன்சன், ஜான்சன், பாக்கியராஜ் ஆகிய 8 பேர் கடந்த 23ம் தேதி தொழிலுக்கு சென்று விட்டு வலைகளை காரில் ஏற்றி கொண்டு ஊருக்கு திரும்பினர். கோட்டைப்பட்டினம் அருகே ஓடாவிமடம் அருகே சென்றபோது கார் மீது எதிரே வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் கிளிட்டாஸ், ஆரோக்கியம், சேசுப்பிள்ளை ஆகிய 3 மீனவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சன்ராஜ் உள்ளிட்ட 5 பேரும் படுகாயமடைந்தனர். இவர்களில் சன்ராஜ் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுhரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் சன்ராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார். சன்ராஜுடன் சேர்த்து கோட்டைப்பட்டினம் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் செய்திகள்
தேர்தல் நடத்தை விதிமுறை தீவிரமாக கண்காணிப்பு
மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல் மத்திய துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோர் 25,616 பேர்
தபால் வாக்களிக்க ஏற்பாடு தீவிரம் மண்டல அளவிலான கட்டுரை போட்டி மவுண்ட் சீயோன் சர்வதேச பள்ளி மாணவி வெற்றி
புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி
வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்