இடையாத்தூரில் ஜல்லிகள் கொட்டியதோடு பாதியில் நிற்கும் சாலை அமைக்கும் பணி
1/28/2021 4:22:45 AM
பொன்னமராவதி, ஜன. 28: பொன்னமராவதி அருகே இடையாத்தூரில் சாலை அமைக்க ஜல்லிகள் மட்டும் கொட்டியதுடன் பணி கள் பாதியில் நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பொன்னமராவதி அருகே ஆலவயலில் இருந்து செம்மலாபட்டி வழியாக இடையாத்தூர் செல்லும் தார்ச்சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் இருந்தது. எனவே சேதமடைந்த சாலையை தரமாக அமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து குண்டும் குழியுமாக காட்சியளித்த புலவர்ணார்குடியில் இருந்து இடையாத்தூர் வரை தார்ச்சாலை அமைப்பதற்காக ஜல்லிகள் பெயர்த்து கலவை ஜல்லிகள் போடப்பட்டது. இந்த பணிகள் நடந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் சாலை அமைக்கவில்லை. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப் பட்டு வருகின்றனர். எனவே புலவர்ணார்குடியில் இருந்து இடையாத்தூர் வரை உடனடியாக தார்ச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
தேர்தல் நடத்தை விதிமுறை தீவிரமாக கண்காணிப்பு
மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல் மத்திய துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோர் 25,616 பேர்
தபால் வாக்களிக்க ஏற்பாடு தீவிரம் மண்டல அளவிலான கட்டுரை போட்டி மவுண்ட் சீயோன் சர்வதேச பள்ளி மாணவி வெற்றி
புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி
வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்