கரும்பு பாதிப்பை கணக்கெடுக்காத வேளாண் அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
1/28/2021 4:18:10 AM
மயிலாடுதுறை, ஜன. 28: புயல் மழையால் பாதிக்கப்பட்ட கரும்பு வயல்களை கணக்கெடுக்காத வேளாண் அதிகாரிகளை கண்டித்து மயிலாடுதுறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நிவர், புரவி புயல் காரணமாகவும், சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாகவும் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்தும் கணக்கீடு செய்யாமல் புறக்கணித்து வரும் வேளாண்மை அலுவலர்களை கண்டிப்பது, அரசு அறிவித்த நிவாரணத்தொகையை வங்கி கிளைகள் உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை உடனடியாக வழங்கக்கோரி மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன் அனைத்து விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் முருகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் காசிநாதன், காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க தலைவர் கோபி கணேசன், இயற்கை விவசாயி ராமலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வேலுகுபேந்திரன், மோகன்குமார் மற்றும் திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
நித்திய கல்யாண பெருமாள் கோயில் தெப்ப திருவிழாவில் தீ விபத்து
மது போதையில் ரூ.30,000 மதிப்பிலான நெல் மூட்டைகளை தீயிட்டு கொளுத்திய வாலிபர் கைது
மீன்பிடி சீசன் துவக்கம் அதிகளவில் மீன்கள் சிக்கியதால் கோடியக்கரை மீனவர்கள் மகிழ்ச்சி
சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
நாகை மாவட்டத்தில் நாளை முதல் திருமண மண்டபங்களில் வெளியூர் நபர்கள் தங்க அனுமதி கிடையாது
சோதனை சாவடிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்