ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் முறைகேடு
1/28/2021 3:48:30 AM
சேலம், ஜன.28: சேலம் மாநகராட்சியில் ₹1000 கோடியில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடர்பான ஆவணங்களை அழிப்பதாகவும் திமுக எம்.பி. பார்த்திபன் குற்றம் சாட்டியுள்ளார். சேலம் வஉசி பூ மார்க்கெட்டில் அதிக கட்டணம் வசூலிப்பதாக, வியாபாரிகள் திமுக எம்பி பார்த்திபனிடம் தெரிவித்தனர். இதையடுத்து, அவர் மாநகராட்சி அலுவலகத்திற்கு நேற்று வந்து மாநகராட்சி கமிஷனர் (பொ) அசோகனை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சேலம் வஉசி பூ மார்க்கெட்டில் வியாாரிகளிடம் சுங்க கட்டணம் வசூலிப்பதில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. இதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் மாநகராட்சியில் ₹1000 கோடியில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட எந்த ஒரு பணியும், தரமாக இல்லை. பல்வேறு முறைகேடுகள் தொடர்பான ஆவணங்களை ரகசியமாக எரித்து அழிக்க, அதிகாரிகள் சிலர் திட்டமிட்டுள்ளனர். அந்த ஆவணங்களை பாதுகாக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பிரதமரிடம் மனு அளிக்க உள்ளேன். இந்த பிரச்னைகளுக்கு 10 நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படாவிட்டால், நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்ததும், மாநகராட்சி அலுவலகத்தை பூட்டு போட்டு, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவேன். இவ்வாறு பார்த்திபன் எம்.பி. தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
சேலம் ஜருகுமலையில் தொடரும் அவலம் பழுதடைந்த கட்டிடத்தில் அரசுப்பள்ளி
பைப்லைன் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல்
ஓமலூர் அரசு மருத்துவர்கள் சாதனை
ஜெயலலிதா பிறந்தநாள் விழா
ஆடு மேய்த்த சிறுவன் கிணற்றில் விழுந்து பலி
விசிக பிரமுகர் கைது
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்