ஸ்டூடியோவில் கேமரா திருட்டு
1/28/2021 3:45:00 AM
பள்ளிப்பாளையம், ஜன.28:குமாரபாளையம் அடுத்த சானார்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(50). இவர் குமாரபாளையம்-சேலம் சாலையில் உள்ள காம்ப்ளக்சில் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளார். நேற்று காலை ஸ்டூடியோவை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் கலைந்து கிடந்தன. கடையிலிருந்த விலையுயர்ந்த கேமரா, ₹5 ஆயிரம் பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், குமாரபாளையம் போலீசார் நேரில் விசாரணை நடத்தினர். மேலும், தடய அறிவியல் நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர். மர்ம நபர்கள், ஸ்டூடியோ அருகிலிருந்த டெய்லர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அதில், பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் ஏதும் இல்லாததால் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதையடுத்து, காம்ப்ளக்சில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள மர்ம நபர்களின் உருவத்தை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
வீட்டுமனை வழங்குவதாக வதந்தி குடிசை போட வந்த மக்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை
80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு தபால் ஓட்டு
ஆக்கிரமிப்பு நிலத்தில் வீட்டை இடிக்க எதிர்ப்பு
டூவீலர், காரில் கொண்டு சென்ற ₹4 லட்சம் பறிமுதல்
பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து 7 டன் கழிவுகள் எரிந்து நாசம்
சிறுநீரக பிரச்னைகளுக்கு சிறப்பு முகாம்