SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனைவியை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 5 ஆண்டு சிறை

1/28/2021 3:44:44 AM

நாமக்கல், ஜன.28: திருச்செங்கோட்டில் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு, 5ஆண்டு சிறைதண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருச்செங்கோட்டை அடுத்த சூரியம்பாளையத்தை சேர்ந்தவர் வடிவேல் (35). இவரது மனைவி கனகவள்ளி (32). திருமணமான 4 மாதத்தில், வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கனகவள்ளியை கொடுமைபடுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 2011 செப்டம்பர் 29ம் தேதி, கனகவள்ளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, திருச்செங்கோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் வடிவேலு, அவரது தந்தை சுள்ளியப்பன்(60), தாய் ராமாயி (57), சகோதரி தனலட்சுமி (32), சகோதரர் கணேசன்(38) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சசிரேகா, வடிவேலுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ₹2 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். மற்ற 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் சுசிலா ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 07-03-2021

    07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-03-2021

    22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 06-03-2021

    06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • military-helicopter5

    துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!

  • 05-03-2021

    05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்