வெங்கடேசப்பெருமாள் கோயில் தேர்த்திருவிழா
1/28/2021 3:09:36 AM
அவிநாசி,ஜன.28: திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி அருகே பிரசித்தி பெற்றதும்,‘‘ மேலத் திருப்பதி’’எனப் போற்றப்படுவதுமான மொண்டிபாளையம் வெங்கடேசப்பெருமாள் கோயில் தேர்த்திருவிழா கடந்த 21ம்தேதி கொடியேற்றத்துடன் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேவி, பூதேவி சமேத வெங்கடேசப்பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருத்தேர் ரதவீதிகளின் வழியாக வந்து, நேற்று மாலை தேர்நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சனிக்கிழமை பரிவேட்டை, குதிரை வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா புறப்பாடும், வெள்ளிக்கிழமை சேஷ வாகனத்தில் திருவீதி உலாவும், இரவு தெப்பத்தேர் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
மேலும் செய்திகள்
ஒருமுறை விலை நிர்ணயித்தால் நூல் விலையை 3 மாதங்களுக்கு அதிகரிக்கக் கூடாது
சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்காக 45 ஆண்டு பழமையான மரம் வெட்டி அகற்றம்
பெரியார் சிலையை மறைத்துள்ள துணியை அகற்றக் கோரி மனு
தெற்கு மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு
மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக் கூட்டம் மத்திய மாவட்ட திமுகவினர் திரளாக பங்கேற்க முடிவு
வங்கிக்கு பணம் கொண்டு செல்லும் போது ஆவணம் தேவை