ஓடும் ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு பிரசவம்
1/28/2021 3:05:17 AM
பந்தலூர்,ஜன.28 : கூடலூர் அருகே எல்லமலை பகுதியில் ஓடும் ஆம்புலன்ஸில் பெண்ணிற்கு சுக பிரசவம் ஆனது. கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சி எல்லமலை நாயக்கன் காலணியில் வசித்துவரும் கூலித்தொழிலாளி மணி (28). இவரது மனைவி சுந்தரி (25). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று பிரசவம் வலி ஏற்பட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்ஸ் மூலம் ஓவேலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். வழியில் பிரசவ வலி அதிகரிக்கவே, சுந்தரிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் நசுருதீன் மற்றும் பைலட் பரமேஷ்வரன் ஆகியோர் பிரசவம் பார்த்துள்ளனர்.
அதன்பின் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.தாயும்,குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவர் தெரிவித்தாா்.சுந்தரிக்கு இது 2வது பிரசவம் ஏற்கனவே 2 வயதில் பெண் குழந்தை ஒன்று இருப்பது குறிப்பிடதக்கதாகும். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உதவியாரை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.
மேலும் செய்திகள்
3 சட்டமன்ற தொகுதிகளில் 51.08 சதவீதம் பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு
நீலகிரி மாவட்டத்தில் மழையால் சேதமான சாலைகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
ஊட்டியில் அடுத்தடுத்த வீடுகளில் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை
சட்டமன்ற பேரவை விதிகள் ஆய்வு குழு கூட்டம்
புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு: நீலகிரி மாவட்ட திமுக செயலாளராக பா.மு.முபாரக் தேர்வு
நீலகிரி மாவட்டத்தில் மழையால் சேதமான சாலைகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!