ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான வணிக காப்பகம் திறப்பு
1/28/2021 1:02:32 AM
கோவை, ஜன.28: ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவர்களாக விளங்கும் முன்னாள் மாணவர்கள் மற்றும் கல்லூரியின் பேராசிரியர் இணைந்து உருவாக்கிய வணிக காப்பகத்தின் (ஸ்டார்ட்அப் மற்றும் இன்க்குபேஷன் சென்டர்) திறப்பு விழா நடைபெற்றது. இக்கல்லூரியின் முன்னாள் மாணவிகளான அபர்ணா, நிவேதா, மோனிஷா மற்றும் கருவியியல் துறையில் இணைப் பேராசிரியர் திருக்குறள் கனி ஆகியோர் இணைந்து தொடங்கிய டெக்ட்ஸோ சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஸ்மார்ட் தெர்மல் சேனிடைசேர்ஸ், டாட்டிக்வோல்ட்டேஜ் ரெகுலேட்டர் மற்றும் ஆட்டோமேட்டிக் வாட்டர் லெவல் கண்ட்ரோலர் என்ற புதிய மூன்று கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இக் கருவிகள் எரிபொருளை சிக்கனமாக உபயோகப்படுத்துதல், காற்று நச்சுத் தன்மை மற்றும் புகை வெளியேறும் அளவு தெரிவித்தல் என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இக்கருவிகளை விழாவின் சிறப்பு விருந்தினரான கோவை இன்டோ செல் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் மற்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சேர்மென் கணேஷ் குமார் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். இச் சாதனை நிகழ்த்திய இக்குழுவை எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயண சுவாமி, கல்லூரியின் முதல்வர் அலமேலு, கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் கருவியல் துறையின் தலைவர் சீனிவாசன் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள் பாராட்டினார்கள்.
மேலும் செய்திகள்
பிரதமர் மோடி இன்று கோவை வருகை பாதுகாப்புக்கு 7 ஆயிரம் போலீசார் குவிப்பு
மேற்கு மண்டலத்தில் சட்ட விரோத செயல்கள் தடுக்கப்படும்
தமிழ்நாடு அக்ரிகல்ச்சர், ஹார்டிகல்ச்சுரல் சர்வீசஸ் பணிக்காலியிட தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு
போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் கோவையில் இன்று 700 பஸ்கள் ஓடாது
கோவையில் 5 ஆயிரம் லாரிகள் நாளை ஓடாது
வாடகை ஆட்டோக்களுக்கான கட்டணம் நிர்ணயிப்பதில் இழுபறி
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்