சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
1/28/2021 12:55:21 AM
கடலூர், ஜன. 28: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ள எழுத்தூரை சேர்ந்தவர் சிவா. இவரது மகன் ராஜ்குமார் என்கிற ஊமையன் (23). இவர் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி, அதே பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனியாக டிவி பார்த்து கொண்டிருந்த 9 வயது சிறுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். உடனே அந்த சிறுமி, வீட்டுக்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்தார். அப்போது ராஜ்குமார் திடீரென கட்டிபிடித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, ராஜ்குமாரின் கையை கடித்து விட்டு, அருகில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு ஓடிச்சென்று நடந்த சம்பவம் கூறி அழுதுள்ளார்.பின்னர் இது குறித்து சிறுமியின் தாய், ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கை விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட ராஜ்குமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2,500 அபராதமும் விதித்து நீதிபதி எழிலரசி தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் கலாசெல்வி ஆஜரானார்.
மேலும் செய்திகள்
செஞ்சி அருகே சடலத்துடன் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
மருத்துவ கலந்தாய்விற்கு அழைக்காமல் படிப்பை தேர்வு செய்யவில்லை என வந்த கடிதத்தால் மாணவி, பெற்றோர் அதிர்ச்சி
கடலூர் ஆல்பேட்டையில் அதிரடி ரெய்டு பெங்களூர் தொழிலதிபரிடம் ₹51 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்
கடலூர் அருகே தாய், மகளை வெட்டி கொன்ற வழக்கில் உறவினரிடம் போலீசார் தீவிர விசாரணை
ஊழலில் தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது
சிதம்பரம் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து ஒருதலை காதலால் ஆசிரியர் வெறிச்செயல்
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!