SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நன்னடத்தையை மீறிய 2 சாராய வியாபாரி கைது

1/28/2021 12:54:55 AM

சங்கராபுரம், ஜன. 28: சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் மனைவி அஞ்சலை (50). இவர் சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக பகண்டை கூட்ரோடு, திருக்கோவிலூர், சங்கராபுரம் காவல் நிலையங்களில் வழக்கு உள்ளது. இவர் இனி சாராயம் விற்க மாட்டேன் என உறுதி கூறினார். ஆனால் நன்னடத்தையை மீறி கடந்த வாரம் சாராயம் விற்றதால் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நன்னடத்தையை மீறியதற்காக கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் காந்த் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டது.  151 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதேபோன்று சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த முனுசாமி மகன் ஜெயராமன் (58) மீது கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், சங்கராபுரம் காவல் நிலையங்களில் சாராய விற்பனை செய்வதற்காக வழக்கு உள்ளது. இவர் சாராயம் விற்க மாட்டேன் என்று நன்னடத்தை சான்று பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் சாராயம் விற்ற ஜெயராமன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 05-03-2021

    05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 100farmmmm

    100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?

  • train4

    கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!

  • mars-4

    செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!

  • hgoteell__sss

    தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்