பிரபல நகைக்கடையில் 5.20 கிலோ தங்கம் கொள்ளையடித்த ஊழியரை பிடிக்க ராஜஸ்தான் விரைந்தது தனிப்படை: செல்போன் எண் மூலம் நண்பர்கள், உறவினர்களிடம் விசாரணை
1/28/2021 12:30:22 AM
சென்னை: தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள லலிதா ஜூவல்லரி மார்க்கெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக ராஜஸ்தானை சேர்ந்த பிரவீன் சிங் என்பவர் தங்க நகைகள் இருப்பு கண்காணிப்பு பிரிவில் வேலை செய்து வந்தார். அலுவலகத்தில் உள்ள தங்க நகைகள் இருப்பு குறித்து கணக்காய்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் நகைகள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, மொத்த தங்க நகைகளில் 5 கிலோ 220 கிராம் குறைந்து இருந்தது. இதன் மதிப்பு ரூ.2.40 கோடி. இதையடுத்து பிரவீன் சிங்கை தேடியபோது அவர் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து லலிதா ஜூவல்லரி மார்க்கெட் பிரைவேட் லிமிடெட் நிறுவன துணை மேலாளர் முருகன்(51) சம்பவம் குறித்து நேற்று முன்தினம் தேனாம்ேபட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்த போது, ஊழியர் பிரவீன் சிங் கடந்த சனிக்கிழமை நகைகளை ஒரு பையில் வைத்து கொண்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. நகைகளுடன் தலைமறைவாக உள்ள பிரவீன் சிங்கை பிடிக்க போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி தனிப்படையினர் குற்றவாளியின் செல்போன் எண்ணை வைத்து அவருடன் கடந்த ஒரு வாரத்தில் பேசிய நபர்கள் குறித்த பட்டியல் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்கு இன்ஸ்பெக்டர் தலைமையிலான ஒரு தனிப்படை ஒன்றும் விரைந்துள்ளது.
மேலும் செய்திகள்
கம்பெனி கம்பெனியா சென்று வேலை கேட்டு வேன்களை திருடிய பலே வாலிபர் கைது
இந்திய கம்யூ. தலைவர் தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி
கண்ணாமூச்சி விளையாடலாம் என கூறி குழந்தைகளை ஆட்டோவில் கடத்த முயன்ற மர்ம கும்பல்: பொதுமக்கள் திரண்டதால் தப்பி ஓட்டம்
முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை: அப்போலோ டாக்டர்கள் சாதனை
பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம் மியூசியமாகிறது
1.5 கோடி நிலம் அபகரிப்பு: 2 பேர் கைது
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்