திருச்செங்கோட்டில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
1/27/2021 4:17:13 AM
திருச்செங்கோடு, ஜன.26: மல்லூர் அம்மாபாளையம் ஏரிக்கரையை சேர்ந்தவர் பழனிவேல்(37). கூலி தொழிலாளி. இவருக்கு கலைவாணி(32) என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். பழனிவேல் நேற்று முன்தினம் சங்ககிரியை அடுத்துள்ள இருகாலூர் ஊத்துப்பாளையத்தில், இல்ல திருமண விழா நடந்தது. இதற்காக சீரியல் செட், வண்ண விளக்குகள் அமைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது இரும்பு குழாயை உயர்த்தி பிடித்தபோது மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் குழாய்பட்டது. இதில் மின்சாரம் தாக்கி பழனிவேல் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மல்லசமுத்திரம் போலீசார், பழனிவேலின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
வீட்டுமனை வழங்குவதாக வதந்தி குடிசை போட வந்த மக்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை
80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு தபால் ஓட்டு
ஆக்கிரமிப்பு நிலத்தில் வீட்டை இடிக்க எதிர்ப்பு
டூவீலர், காரில் கொண்டு சென்ற ₹4 லட்சம் பறிமுதல்
பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து 7 டன் கழிவுகள் எரிந்து நாசம்
சிறுநீரக பிரச்னைகளுக்கு சிறப்பு முகாம்