ஆலங்குடி எம்எல்ஏ பேச்சு புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
1/27/2021 4:07:09 AM
புதுக்கோட்டை, ஜன. 27: புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் டாக்டர் ஜலஜா குமாரி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். மாணவர் ரபேல் லால் ராபின்சன் இந்த கொரோனா தொற்று காலத்தில் 72வது குடியரசு தினம் சவால் நிறைந்ததாக இருக்கிறது, இந்நாளை காண பாடுப்பட்ட தியாகிகளையும் நினைவு கூர்ந்து சிறப்புரையாற்றினார். இதைதொடர்ந்து 12ம் வகுப்பு மாணவர் கலில் ரகுமான், இந்நாள் குறித்த கவிதையை செந்தமிழில் வாசித்தார். பின்னர் பள்ளி முதல்வர் ஜலஜா குமாரி சிறப்புரையாற்றுகையில், மாணவர்கள் தன் கடமையை சரிவர செய்ய வேண்டும். நாட்டுக்கு சேவை செய்ய தியாக மனப்பான்மையை வளர்த்து கொள்ள வேண்டும். இந்த கொரோனா தொற்று காலத்தில் முககவசம், சமூக இடைவெளி, சுற்றுப்புற தூய்மையை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.மாணவர்களே நம் நாட்டின் எதிர்காலம். எனவே எல்லா துறையிலும் சாதனை படைத்து வல்லரசாக்க ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும் என்றார்.பள்ளி இயக்குநர் டாக்டர் ஜோனத்தன் ஜெயபரதன், இணை இயக்குநர் ஏஞ்சலின் ஜோனத்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
கோடை வெயிலில் இருந்து பறவைகளை காப்பாற்ற வீட்டு மாடியில் பாத்திரத்தில் தண்ணீர் வைக்க வேண்டும்
விராலிமலை அருகே வாகனம் மோதி கொத்தனார் பலி
தென்னையை தாக்கும் வண்டுகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
அதிகாரிகள் எச்சரிக்கை திருமயம் அருகே லாரி- சுற்றுலா வேன் மோதல்: 13 பேர் காயம்
குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
அறந்தாங்கி வட்டார வள மையத்தில் ஓவிய திருவிழா போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா