சங்கராபுரம் அருகே ஏரியில் மூழ்கிய 2 பேர் சடலமாக மீட்பு
1/27/2021 4:06:14 AM
சங்கராபுரம், ஜன. 27: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ரங்கப்பனூர் கிராமத்தை சேர்ந்த சுப்பு மகன் காமராஜ்(50).அதே கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் அர்ச்சுனன்(42). இருவரும் கடந்த 25ம் தேதி மாலை அதே கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்க சென்றனர். ஆனால் ஏரியில் குளிக்க சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் ஏரிக்கு சென்று தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து வடபொன்பரப்பி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மற்றும் சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பொதுமக்களின் உதவியுடன் ஏரியில் மாயமான இருவரையும் தீவிரமாக தேடினர். இந்நிலையில் நேற்று ஏரியில் இருந்து இருவரையும் சடலமாக தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இறந்துபோன இருவரும் கூலித்தொழிலாளிகள் என்பதும், இவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
பிரதமர் மோடிக்கு தடுப்பூசி போட்ட புதுச்சேரி செவிலியர் நெகிழ்ச்சி
டெல்லி கலவரத்துக்கு மத்திய ஆட்சியாளர்களே காரணம்
எம்ஐடி கல்லூரியில் எக்ஸலன்ஸ் பயிற்சி மையம் திறப்பு விழா
பறவைகளை விற்கும் குறவர்கள் வனத்துறை தீவிர கண்காணிப்பு
மரத்தில் லாரி மோதி ஓட்டுநர் பலி
முருங்கப்பாக்கம் முதல் சிவாஜி சிலை வரை ₹300 கோடியில் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க மத்திய அமைச்சர் ஒப்புதல்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்