மண்டைக்காடு கோயிலில் மாசிக்கொடை பந்தல் கால் நாட்டு விழா நாளை நடக்கிறது
1/27/2021 4:03:39 AM
குளச்சல், ஜன.27: மண்டைக்காடு கோயிலில் மாசிக்கொடை பந்தல் கால் நாட்டுவிழா நாளை நடக்கிறது. குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இரு முடிக்கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோயில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இக்கோயிலில் மாசிக்கொடை விழா வரும் பிப்ரவரி மாதம் 28ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் மாதம் 9ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதனை முன்னிட்டு பந்தல்கால் நாட்டுவிழா தைப்பூச நாளான நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது. காலை 4.30 மணிக்கு திருநடை திறப்பு, 5.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நிறை புத்தரிசி பூஜை, தொடர்ந்து பந்தல்கால் நாட்டுவிழா நடக்கிறது. இதை தொடர்ந்து இந்து சேவா சங்கம் சார்பில் சமய மாநாடு பந்தல் கால் நாட்டு விழா நடக்கிறது. நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதி மற்றும் கேரளா மாநிலத்திலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தக்கலை பகுதியில் துணை ராணுவம் கொடி அணிவகுப்பு
குமரி மாவட்டத்தில் மது விற்பனையை கண்காணிக்க பறக்கும்படையில் குழு
ஷாலிமார் ரயில் திருப்பதி செல்லாது
மலைகளில் தொடரும் தீ விபத்து
மது, புகையிலை விற்பனை செய்த 24 பேர் கைது
அய்யா அவதார தின விழா சாமிதோப்புக்கு பிரமாண்ட ஊர்வலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!