பெரம்பலூரில் பரபரப்பு 72வது குடியரசு தினவிழா கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்
1/27/2021 4:03:36 AM
பெரம்பலூர்,ஜன.27: பெரம்பலூரில் 72-வது குடியரசு தினத்தினை முன்னிட்டு கலெக்டர் வெங்கட பிரியா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 72 வது குடியரசுதின விழா நேற்று நடைபெற்றது. எஸ்பி நிஷா பார்த்திபன், டிஆர்ஓ ராஜேந்திரன், சப்-கலெக்டர் பத்மஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட்ட கலெக்டர் வெ ங்கடபிரியா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்று, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தடுப்புப் பணியில் சிறப்பாக செயல் பட்ட 74 அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றி தழ்களும், சிறப்பாகப் பணிபுரிந்தமைக்காக 23 போலீசாருக்கு தமிழக முதலமை ச்சர் பதக்கங்களையும் வழங்கி சிறப்பித்தார். விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் லோகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சக்திவேல், முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன் உள்பட பலர் கலந்து கொ ண்டனர்.
பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சுபாதேவி தேசிய கொடியை ஏற்றினர். நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட நிரந்தர மக்கள் நீதி மன்ற தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி கருணா நிதி, மாவட்ட மகிளா நீதி மன்ற நீதிபதிகிரி, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தன சேகரன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவ ரும்(பொ), மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்குழுவின் செயலாளருமான வினோதா, சார்பு நீதிபதி ஷகிலா, குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் அசோக் பிரசாத், கருப்பசாமி ஆகியோர் முன் னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள், நீதி மன்ற மேலாளர்கள், அலுவ லர்கள் கலந்து கொண்டனர். இதேபோல பெரம்பலூர் மாவட்ட ஊர்க் காவல் படை அலுவலகத் தில் ஊர்க்காவல் படையின் மண்டல தளபதி ராம்குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
மேலும் செய்திகள்
நகராட்சி ஆணையர் தகவல் செலவின கண்காணிப்பு தொடர்பாக வங்கி மேலாளர்களுடன் தேர்தல் அலுவலர் ஆலோசனை
ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் சட்டமன்ற தேர்தல் எதிரொலி மதுபானம் கடத்தல், பதுக்கி விற்றால் செல்போனில் புகார் தெரிவிக்கலாம்
மொபட்டில் சென்றபோது பெண்ணிடம் நகை பறித்தவர் கைது
நிதி ஒதுக்கி 10 மாதங்களுக்கு பிறகு போக்குவரத்துக்கு இடையூறாக நுழைவு வாயில் கட்டும் பணி
தேர்தலில் போட்டியிட டெபாசிட் தொகைக்காக பிச்சை எடுக்கும் விவசாயிகள்
தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்க ராணுவப்படை, போலீசார் அணிவகுப்பு 2வது முறையாக நடந்தது
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!