நாகர்கோவிலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி
1/27/2021 4:02:12 AM
நாகர்கோவில், ஜன.27: நாகர்கோவில் பெருவிளை சிவன்கோயில் தெருவை சேர்ந்தவர் நயினா முகமது. இவரது மனைவி ரஹ்மத் நிசா (50). கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி, நாகர்கோவில் கே.பி. ரோடு ஹனீபா நகர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, ரஹ்மத் நிசா மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சுய நினைவு இழந்த ரஹ்மத் நிசா சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் நேற்று முன் தினம் தான் புகார் அளித்தனர். இந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ெஜயராஜன் வழக்கு பதிவு செய்தார். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மோதிய வாகனத்தை அடையாளம் காண முடியுமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் செய்திகள்
தக்கலை பகுதியில் துணை ராணுவம் கொடி அணிவகுப்பு
குமரி மாவட்டத்தில் மது விற்பனையை கண்காணிக்க பறக்கும்படையில் குழு
ஷாலிமார் ரயில் திருப்பதி செல்லாது
மலைகளில் தொடரும் தீ விபத்து
மது, புகையிலை விற்பனை செய்த 24 பேர் கைது
அய்யா அவதார தின விழா சாமிதோப்புக்கு பிரமாண்ட ஊர்வலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!