மயிலாடுதுறையில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
1/27/2021 4:01:37 AM
மயிலாடுதுறை, ஜன. 27: மயிலாடுதுறையில் நடந்த குடியரசு தினவிழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் லலிதா ஏற்று கொண்டார். மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் லலிதா ஏற்று கொண்டார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை கலெக்டர் லலிதா வழங்கினார். விழாவில் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நாதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் செயற்பொறியாளர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார், அரசு மருத்துவமனையில் டாக்டர் ராஜசேகர், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஆய்வாளர் சிங்காரவேலன், டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி அண்ணாதுரை ஆகியோர் கொடியேற்றினர்.
மேலும் செய்திகள்
சாக்கு பற்றாக்குறையால் 16,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாமல் தேக்கம்
தேர்தல் விதிமுறை மீறி போஸ்டர் ஒட்டிய விசி நிர்வாகிகள் மீது வழக்கு
கலெக்டர் தகவல் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல் 150 ஆண்டுகளுக்கு பிறகு கீரங்குடி குடவரசி அம்மன் கோயிலில் தெப்ப திருவிழா
வங்கிகளில் சந்தேகத்துக்கு இடமான பண பரிவர்த்தனை கண்காணிக்கப்படும்
3 பறக்கும் படைகள் அமைப்பு வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மாசிமக விடையாற்றி விழா
நாகை மாவட்டத்தில் 48 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை