அதிமுக வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
1/27/2021 3:59:41 AM
விருதுநகர், ஜன. 27: விருதுநகர் பழைய பஸ்நிலையம் அருகில், மேற்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர்.விஜயகுமரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசுகையில், ‘மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் நடத்த தகுதியுள்ள ஒரே கட்சி அதிமுகதான். வீரவணக்க நாள் நிகழ்ச்சிக்கு அடித்தளமிட்டு மாணவர்களை திரட்டி இன்னுயிர் தந்தவர்கள் முன்னாள் துணை சபாநாயகர் விருதுநகர் சீனிவாசன், காளிமுத்து, எல்.கணேசன் ஆகியோர் மொழிக்கான தங்களை வருத்தி, அதிமுகவில் இருந்து மறைந்தனர்.
தலைமைக்கழக பேச்சாளர் மதுரை பாண்டியன், திண்டுக்கல் குணசேகரன், கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா, மாணவரணி செயலாளர் எஸ்.எஸ்.கதிரவன் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் எம்எல்ஏ சந்திரபிரபா, அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் கோகுலம்.எம்.தங்கராஜ், நகர செயலாளர் நைனார் முகம்மது, ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், தர்மலிங்கம், ராஜசேகர், ஒன்றிய தலைவர் சுமதி, மாணவரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
முகாமிலிருந்து திரும்பிய ஆண்டாள் கோயில் யானைக்கு திருவில்லி.யில் உற்சாக வரவேற்பு
திருவில்லி.யில் 2வது நாளாக கருப்புக்கொடி ஏற்றி அரசுக்கு எதிர்ப்பு
வத்திராயிருப்பில் பதற்றமான 6 வாக்குச்சாவடி
ராஜபாளையத்தில் வைக்கோல் படப்பில் தீ
பட்டாசு ஆலை விபத்துகளால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது தடுக்க ஏஐடியுசி கோரிக்கை
100% வாக்களிக்கக்கோரி கையெழுத்து இயக்கம்
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!