விருதுநகரில் 72வது குடியரசு தினவிழா கோலாகலம் கலைநிகழ்ச்சிகளுடன் களைகட்டியது
1/27/2021 3:59:26 AM
விருதுநகர், ஜன. 27: விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் 72வது குடியரசு தினவிழா நேற்று நடந்தது. இதில், எஸ்பி பெருமாள் முன்னிலையில், கலெக்டர் கண்ணன் தேசிய கொடியேற்றினார். ஆயுதப்படை ஆய்வாளர் பழனிக்குமார் துணை ஆய்வாளர்கள் விருமாண்டி, கோகிலா, மணிகண்டன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற காவலர் அணிவகுப்பை கலெக்டர், எஸ்பி. ஏற்றுக்கொண்டனர். விழாவில் 122 போலீசாருக்கு முதல்வர் பதக்கம், 52 போலீசாருக்கு சான்றிதழ், அரசு அலுவலர்கள் 573 பேர் உட்பட 625 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் டி.ஆர்.ஓ. மங்களராமசுப்பிரமணியன், திட்ட அலுவலர் ஜெயக்குமார், சப்கலெக்டர் தினேஷ்குமார் உட்பட அனைத்து துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் குடியரசு தினவிழா விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கூடுதல் மாவட்ட நீதிபதி சரண் தேசிய கொடியேற்றினார். வழக்கறிஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளிகள்:விருதுநகர் நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தலைவர் டாக்டர் ஜெரால்டு ஞானரத்தினம் தேசிய கொடியேற்றினார். பள்ளிச் செயலாளர் டாக்டர். வெர்ஜின் இனிகோ சிறப்புரையாற்றினர். ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். கல்லூரிகள்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் செயலாளர் ஜெயக்குமார் முன்னிலையில் தலைவர் வன்னியானந்தம் தேசிய கொடியோற்றினார். நிகழ்ச்சியில் பொருளாளர் முத்து, கல்லூரி முதல்வர் டாக்டர் சுந்தரபாண்டியன், சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பழனியப்பன், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி வளாகத்தில் நம்பிக்கை சிறகுகள் அமைப்பு சார்பில் 800 மரக்கன்றுகள் நடப்பட்டன. விருதுநகர் நோபிள் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயலாளர் டாக்டர். வெர்ஜின் இனிகோ தேசிய கொடியேற்றினார். நிறுவனர் டாக்டர். ஜெரால்டு ஞானரத்தினம் சிறப்புரையாற்றினார். விழாவில் கல்லூரி ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
வி.வி.வி.பெண்கள் கல்லூரியில் உபதலைவர் வித்யா ராஜன் தேசிய கொடியேற்றினார். செயலாளர் ரவிசேகர், தலைவர் மகேஷ்பாபு, இணைச் செயலாளர் ராதிகா வன்னி ஆனந்தம், முதல்வர் டாக்டர் மீனாராணி, பேரவை தலைவர் அபிநயஸ்ரீ மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
ராஜபாளையம் அருகே கோயிலை உடைத்து நகை, பணம் ெகாள்ளை
வாக்களிப்பது எப்படி? திருவில்லி.யில் விழிப்புணர்வு பிரசாரம் தீவிரம்
ராஜபாளையம் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு முறை கருத்தரங்கம்
மதுபானம் கடத்தல் தடுக்க பறக்கும் படை நியமனம்
வண்ண வாக்காளர் அட்டை பெறலாம்
ஆமத்தூர் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையில் வசூல் வேட்டை கிராம மக்கள் குற்றச்சாட்டு
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்