மதுரைக்கு மாற்று தண்ணீர் திட்டம் கோரி கூடலூரில் கவன ஈர்ப்பு பேரணி
1/27/2021 3:56:51 AM
கூடலூர், ஜன. 27: வைகை அணையிலிருந்து மதுரை நகருக்கு குடிநீர் சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசு சிறப்பு குடிநீர் திட்டம் என்ற பெயரில்லோயர்கேம்ப்பிலிருந்து ராட்சத குழாய் மூலமாக மதுரைக்கு தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்காக கட்டப்படும் தடுப்பணையானது கம்பம் கூட்டுக்குடிநீர் திட்ட தடுப்பணைக்கு மேல்பகுதியில் அமையவுள்ளது. இதனால் தேனி மாவட்டம் பாலைவனமாகி, கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். ஒரு போகம் மட்டுமே விவசாயம் செய்து வரும் விவசாய நிலங்களும் தரிசு நிலங்களாக மாறிவிடும்எனவே தமிழக அரசு இத்திட்டத்தை கைவிட்டுவிட்டு,மாற்று திட்டமான வைகை அணையை தூர்வாரி, கூடுதல் தண்ணீரை சேகரித்து மதுரைக்கு தேவையான குடிநீரை எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது ராமநாதபுரம் தொண்டியிலிருந்து கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தின் மூலமாக தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என கோரி கூடலூரில் கவனஈர்ப்பு பேரணி நடைபெற்றது. பழைய பேருந்து நிலையத்தில் ஏற்று துவங்கிய பேரணியானது தேவர்சிலை, தேசிய நெடுஞ்சாலை, காய்கறி மார்கெட் வழியாக கூலிக்காரன் பாலம் வரை சென்றது. இதில்அனைத்து விவசாய சங்க ஆலோசகர் முத்துராமலிங்கம், டாக்டர் சதீஷ்பாபு, செந்தில்குமார் ஜெயபால், கொடியரசன், ராஜா, ஜெகன், ரஹீம் மற்றும் கூடலூர் அனைத்து சமுதாய பொதுமக்கள், அனைத்து விவசாய சங்கங்கள், தேனி மாவட்ட முல்லைப்பெரியாறு பாசன- குடிநீர் பாதுகாப்பு சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மரத்தில் இருந்து விழுந்து விவசாயி பலி
தேனி, பெரியகுளத்தில் வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
கார், வேன்களில் கட்சிக்கொடி தேர்தல் ஆணையம் அலட்சியம்
ேதவதானப்பட்டி அருகே விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்
தேனி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை
அம்மா சிமெண்ட் இனிமேல் 25 மூட்டை தான் கிடைக்கும்