10 மாதங்களுக்கு பின் சுருளி அருவி திறப்பு குளிக்க தடை நீடிப்பால் ஏமாற்றம்
1/27/2021 3:56:39 AM
கம்பம், ஜன. 27: தேனி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும், புண்ணிய தலமாகவும் விளங்கக்கூடியது சுருளி அருவி. இங்கு தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளாவிலிருந்தும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுருளி அருவி பராமரிப்பை கம்பம் கிழக்கு வனச்சரகம் மேற்கொண்டு வருகிறது. சுருளி அருவியில் நுழைவு கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு மார்ச் 22 தேதி முதல் சுருளி அருவியில் பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால் கடந்த 10 மாதங்களாக சுருளி அருவி அடைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் சுருளி அருவி திறக்கப்பட்டுள்ளது. ஆனால் குளிக்க தடை நீடிப்பதாக கம்பம் கிழக்கு வனச்சரக வன காப்பர் சுரேஷ் தெரிவித்துள்ளார். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்ஜெய்லானி கூறுகையில், ‘சுருளி அருவியில் ரூ.30 கட்டணம் கொடுத்து உள்ளே செல்வது குளிக்கத்தானே தவிர, வேறு எதற்கும் கிடையாது. ஆனால் கட்டணம் செலுத்தி விட்டு அருவிக்கு சென்று குளிக்க கூடாது என்பதை ஏற்க முடியாது. எனவே மாவட்ட நிர்வாகம் சுருளி அருவியில் குளிக்க உடனே அனுமதியளிக்க வேண்டும்’ என்றார்.
மேலும் செய்திகள்
மரத்தில் இருந்து விழுந்து விவசாயி பலி
தேனி, பெரியகுளத்தில் வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
கார், வேன்களில் கட்சிக்கொடி தேர்தல் ஆணையம் அலட்சியம்
ேதவதானப்பட்டி அருகே விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்
தேனி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை
அம்மா சிமெண்ட் இனிமேல் 25 மூட்டை தான் கிடைக்கும்