குடியரசு தின விழா உற்சாக கொண்டாட்டம் * ரூ.1.21 கோடி நலத்திட்ட உதவி
1/27/2021 3:55:09 AM
சிவகங்கை, ஜன.27: சிவகங்கை கலெக்டர் அலுவலக மைதானத்தில் 72வது குடியரசு தின விழா கோலாகலமாக நடந்தது. எஸ்பி ரோகித்நாதன் ராஜகோபால் வரவேற்றார். கலெக்டர் மதுசூதன்ரெட்டி கொடியேற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். முன்னாள் படைவீரர் நலத்துறை, வருவாய்த்துறை, வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 90பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 21லட்சத்து 15ஆயிரத்து 931மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 126 போலீசாருக்கு பதக்கம் மற்றும் நற்சான்றிதழ்கள் வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் 354 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
போலீசார் சார்பில் அணிவகுப்பு நடந்தது. படைவீரர் பாசறை சார்பில் சிலம்பாட்டம் மற்றும் யோகா, கராத்தே நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிகழ்ச்சியில் டிஆர்ஓ லதா, சிவகங்கை மருத்துவக்கல்லூரி டீன் ரத்தினவேல், மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்து, ஆர்டிஓ முத்துக்கலுவன், மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் பொன்மணி பாஸ்கரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, சுகாதாரப்பணிகள் துதுணை இயக்குநர் யசோதாமணி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், போலீசார், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
தேர்தல் பணியை வழங்க வேண்டும் புகைப்பட கலைஞர்கள் கோரிக்கை
தேவகோட்டையில் இளம்பெண் தீக்குளித்து சாவு
வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல்
கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை
தேர்தலால் கோவில் விழாக்களுக்கு அரசியல் கட்சியினர் தாராள நன்கொடை
மதுபாட்டில் கடத்தலை தடுக்க நடவடிக்கை
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்