நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி
1/27/2021 3:50:30 AM
திருமங்கலம், ஜன. 27: கள்ளிக்குடி அருகே, கள்ளிப்பட்டி மெயின்ரோட்டில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஹெல்மெட்டுடன் முகமூடி அணிந்த 4 பேர், இரு டூவீலர்களில் வந்து டிபார்ட்மெண்டல் ஸ்டோரின் பூட்டை உடைத்தனர். ஆனால், உடைக்க முடியவில்லை. உடனே அருகில் முத்தூட் நிதிநிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, லாக்கரை உடைக்க முயன்றனர். அப்போது அலாரம் ஒலித்ததால், அக்கம்பக்கத்தினர் வந்தனர். இதைப் பார்த்த முகமூடி நபர்கள் தப்பியோடினர். தகவலறிந்த கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்ததில் பணம் கொள்ளையடிக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
ஏப்.6ல் தமிழக சட்டமன்ற தேர்தல் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? சிலசமயம் மாயமாகலாம்... ஆன்லைனில் சரிபாருங்க...
தொழிலாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு புகார் தெரிவிக்க போன் நம்பர் அறிவிப்பு
மயங்கி விழுந்து வாலிபர் சாவு
வீடு புகுந்து திருட்டு
இரட்டை கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற மனு
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்