டெல்லி தடியடியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
1/27/2021 3:50:16 AM
மதுரை, ஜன. 27: டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், மத்திய அரசு தடியடி நடத்தியதை கண்டித்து, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பெரியார் பஸ்நிலையம் அருகே, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் விஜயராஜன் தலைமை வகித்தார். சு.வெங்கடேசன் எம்.பி, மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், புறநகர் மாவட்டச்செயலாளர் ராமகிருஷ்ணன், பொன்னுத்தாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் எம்.பி. வெங்கடேசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், மத்திய பாஜ அரசு திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டு, கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளது. இதில், ஒரு விவசாயி இறந்தார். குடியரசு தினத்தன்று ஜனநாயக முறைப்படி போராடியவர்களை அடக்கும் முறையில் மத்திய அரசு நடந்துள்ளது. இதை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தற்போது விவசாயிகள் முகாமிட்டுள்ள பகுதியில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை முடக்க அரசு எவ்வகையில் முயற்சி செய்தாலும், உழவரின் குரல் வெற்றி பெற்றே தீரும்’ என்றார்.
மேலும் செய்திகள்
மதுரையில் கொரோனா மருத்துவ முகாம் நடக்கும் இடங்கள்
திருமண மண்டபத்துக்கு பூமி பூஜை
வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுக டிஜிட்டல் போர்டுகள் கடைகள், வீடுகளில் கட்டுகின்றனர்
சேடபட்டி-திருமங்கலம் மார்க்கத்தில் கதிரடிக்கும் களமானது சாலை போக்குவரத்துக்கு வாகன ஓட்டிகள் அவதி
துணை ராணுவப்படை கொடி அணிவகுப்பு