மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திருவண்ணாமலையில் திமுக சார்பில்
1/27/2021 3:49:40 AM
திருவண்ணாமலை, ஜன.27: திருவண்ணாமலையில் திமுக மாணவர் அணி சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. திருவண்ணாமலை திருவள்ளுவர் சிலை அருகே, திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் காலேஜ் கு.ரவி தலைமை தாங்கினார். நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மதிவாணன் வரவேற்றார். கூட்டத்தில், திமுக சட்டத்துறை செயலாளர் இரா.கிரிராஜன் மற்றும் தலைமைக் கழக பேச்சாளர் கு.வாஞ்சிநாதன் ஆகியோர் பேசினர். அப்ேபாது, மொழிப் போராட்டத்தில் திமுகவின் பங்களிப்பு, மொழி காக்க உயிர் நீத்த தியாகிகளின் தியாகம் குறித்து விளக்கினர். இதில், முன்னாள் எம்பி த.வேணுகோபால், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.தரன், மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட அமைப்பாளர்கள் கே.வி.மனோகரன், டி.வி.எம்.நேரு, பா.ஷெரீப், ஒன்றிய செயலாளர் ரமணன், இளைஞர் அணி விஜயராஜ், கலைமணி, முன்னாள் கவுன்சிலர் குட்டி புகழேந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வந்தவாசி: வந்தவாசி தொகுதி திமுக சார்பில் மொழிபோர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் கோட்டை மூலை பகுதியில் நடந்தது. கூட்டத்திற்கு எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் கே.ஆர்.சீதாபதி, நகராட்சி முன்னாள் தலைவர் எல்.அப்சர்லியாகத், ஒன்றிய செயலாளர்கள் ஆர்.நந்தகோபால், டி.ராதா, ப.இளங்கோவன், எஸ்.பிரபு, கே.டி.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொருப்பாளர் எச்.ஜலால் வரவேற்றார். இதில் தலைமை பேச்சாளர்கள் தஞ்சை கூத்தரசன், என்.சந்திரபாபு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
மேலும் செய்திகள்
வயல்வெளி வழியாக சடலம் சுமந்து செல்லும் அவலம் பெரணமல்லூர் அருகே கிராம மக்கள் வேதனை மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால்
விலைவாசி உயர்வுக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் 10 ஆண்டுகால ஆட்சியில் வணிகர்களின் எந்த பிரச்னையும் தீர்க்கவில்லை வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா பேட்டி
வந்தவாசி அருகே மீன் வியாபாரியிடம் ₹91 ஆயிரம் பறிமுதல்
ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது 61 ஆயிரம் பெண்ணிடம் திரும்ப ஒப்படைப்பு வந்தவாசியில் தேர்தல் பறக்கும்படை அதிர்ச்சி
ஆரணி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை: ஆர்டிஓ விசாரனை
திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி: சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்