காங்கயத்தில் பனிப்பொழிவுடன் மூடு பனி
1/27/2021 3:40:01 AM
காங்கயம், ஜன.27:காங்கயம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அண்மையில் பரவலாக மழை பெய்து வந்தது. இதன்காரணமாக, காங்கயம் பகுதிகளில் பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசுமையாய் காட்சியளிக்கின்றன. இந்நிலையில், காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் காலை 8 மணி வரை பனிப்பொழிவுடன் கூடிய மூடு பனி காணப்பட்டது. இதனால், அதிகாலை நேரத்தில் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் திணறினர். மேலும், எதிரே வரும் வாகனம் சரிவர தெரியாத அளவிற்கு மூடுபனி காணப்பட்டதால் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனத்தை ஓட்டிச் சென்றனர். மேலும், இந்த பனியால் மேய்ச்சல் நிலங்களில் புற்கள் மேல் பனி உறைந்து காணப்பட்டதால் கால்நடைகள் மேய்வதற்கு சிரமம் ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்பவர்கள் நேற்று பனிமூட்டம் காரணமாக வீட்டிலேயே முடங்கினர்.
மேலும் செய்திகள்
மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் திருப்பூர் மாநகரில் கொடி அணிவகுப்பு
ஸ்டாலின் விளம்பர பாதகைகள் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகளை திமுகவினர் முற்றுகை
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுபாட்டு அறை திறப்பு
மூலப்பொருட்கள் விலை உயர்வு எலாஸ்டிக் விலை 30 சதவீதம் உயர்வு சங்க கூட்டத்தில் தீர்மானம்
5 கடைகளில் தொடர் திருட்டு சிசிடிவியில் பதிவான காட்சிகளை கொண்டு போலீஸ் விசாரணை
விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டுக்கான இயக்கம்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்