72 வது குடியரசு தினவிழா கொண்டாடம் கலெக்டர் தேசிய கொடி ஏற்றி மரியாதை
1/27/2021 3:33:15 AM
கோவை, ஜன. 27: கோவை வ.உ.சி.பூங்கா திடலில் 72வது குடியரசு தினவிழாவையொட்டி நேற்று மாவட்ட கலெக்டர் ராஜாமணி தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் கோவை மாநகர காவல்துறை மற்றும் கோவை மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 124 காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் பதக்கங்களை கலெக்டர் வழங்கினார். அதனைத்தொடர்ந்து பல்வேறு அரசுத்துறைகளை சார்ந்த சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 92 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களையும், 25 ஆண்டுகளாக விபத்தில்லாமல் சிறப்பாக வாகனத்தை இயக்கிய 4 வாகன ஓட்டுநர்களுக்கு தலா நான்கு கிராம் தங்க நாணயங்களையும் கலெக்டர் ராஜாமணி வழங்கினார்.விழாவில் மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண், கோவை சரக காவல்துறை துணை தலைவர் கே.எஸ்.நரேந்திரன்நாயர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாநகர காவல் துணை கமிஷனர் (சட்டம்) ஸ்டாலின், மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி அசோகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாநகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில்மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.கொரோனா தொற்று தடுப்புப்பணியில் சிறப்பாக பணியாற்றிய 10 பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் 25 ஆண்டுகள் அப்பழுக்கின்றி பணி முடித்த 10 பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ரூ. 2 ஆயிரம் வெகுமதியை மாநகராட்சி கமிஷனர் வழங்கினார்.விழாவில் மாநகராட்சி துணை கமிஷனர் மதுராந்தகி, முதன்மை செயல் அலுவலர் (ஸ்மார்ட் சிட்டி) ராஜகுமார், மாநகராட்சி பொறியாளர் லட்சுமணன், மாநகர நகர் நல அலுவலர் ராஜா, மாநகர கல்வி அலுவலர் வள்ளியம்மாள், மண்டல உதவி கமிஷனர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
தி ஐ பவுண்டேஷன் சார்பில் உலக குளுக்கோமா வாரம்
ஞாயிற்றுக்கிழமையும் கொரோனா தடுப்பூசி
விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்
மயானம் சீரமைக்க ரூ.40 லட்சம் செலவு
தேர்தல் பொருட்களுடன் கொரோனா கிட்
உள் ஒதுக்கீடு ஆணையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்