தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சி
1/27/2021 3:28:52 AM
ஈரோடு, ஜன.27: இந்திய அரசு மத்திய பனைப் பொருட்கள் நிறுவனம், கேவிஐசி சார்பில் ஈரோட்டில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நாளை (28ம் தேதி) முதல் பிப்.6ம் தேதி நடக்கிறது. இதில், தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, உரைகல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால்மார்க் தரம் அறியும் விதம் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 18 வயது நிரம்பிய இருபாலரும் கலந்து கொள்ளலாம்.
குறைந்தது 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். செய்முறை பயிற்சி இறுதியில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்கள் தேசிய, கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நகை அடகு நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளர் பணியில் சேரலாம்.
மேலும், சுயமாக நகை கடை, நகை அடமான கடை நடத்த தகுதி பெறுவர். மிகப்பெரிய நகை வியாபார நிறுவனங்களில் தங்க நகை மதிப்பீட்டாளராகவும், விற்பனையாளராகவும் பணியில் சேரலாம். பயிற்சியில் சேர விரும்புவோர் 2 ஸ்டாம்ப் சைஸ் போட்டோ, முகவரி மற்றும் கல்வி சான்றிதழுடன் பயிற்சி கட்டணம் ரூபாய் 6,254 உடன் நேரில் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு ஈரோடு, மேட்டூர் ரோட்டில் உள்ள ஜெம் அண்டு ஜுவல்லரி டெக்னாலஜி டிரெய்னிங் சென்டர் அல்லது 9443728438 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என தலைமை பயிற்சியாளர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
மாநகரில் இன்று மின்தடை
மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்தும் இடங்கள் அதிகரிப்பு
8 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படை, நிலைக்கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு
கூடுதல் வாக்குசாவடி மையங்களில் அடிப்படை வசதி இல்லை
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து விளக்கம்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்