SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடியரசு தினவிழா கொண்டாட்டம் 1.76 கோடி நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார்

1/27/2021 2:41:26 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக விளையாட்டரங்கில், 72 வது குடியரசு தினவிழா இன்று நடைபெற்றது. விழாவில், மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தேசியக் கொடியேற்றி, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.  காவல் துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, கல்வித் துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய, 120 அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.  பின்னர், மூவர்ண பலூன்களை, வெண் புறாக்களையும் பறக்க விட்டார். தொடர்ந்து, 29 பயனாளிகளுக்கு, ரூ.2.14 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் லோகநாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலகுரு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பி.ஸ்ரீதர், உதவி செயற்பொறியாளர் என்.புண்ணியகோட்டி, இளநிலைப் பொறியாளர் எஸ்.கல்யாணசுந்தரம், கூடுதல் எஸ்பி முத்துக்குமார், டிஎஸ்பி எஸ்கே.துரைப்பாண்டியன்,

கோட்டாட்சியர் ப்ரீத்தி பார்கவி, மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் கேவிஜி.உமாமகேஸ்வரி,  வட்டாட்சியர் செந்தில்குமார் உட்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குடியரசு தின விழா நடந்தது.  வக்கீல் சங்க தலைவர் பார்த்திபன் தலைமை தாங்கினார். ஊத்துக்கோட்டை  நீதிமன்ற நீதிபதி விஜயகுமார் தேசிய கொடியேற்றினார். பேரூராட்சியில் செயல் அலுவலர் மாலா , டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி சாரதி, அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தலைமையாசிரியர் மகேஸ்வரன், பெண்கள் அரசு  பள்ளியில் பொறுப்பு தலைமையாசிரியர் சுதாகர்  ஆகியோர் கொடியேற்றி  மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

ஆயுதப்படை பெண் காவலர் மயக்கம்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக விளையாட்டரங்கில், 72 வது குடியரசு தினவிழா நேற்று நடைபெற்றது. விழாவில், மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தேசியக் கொடியேற்றி, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அப்போது ஆயுதப்படை பெண் காவலர் மயக்கமடைந்து கீழே சாய்ந்தார். அவரை உடனடியாக தூக்கிச்சென்று உட்கார வைத்து முகத்தின் மீது தண்ணீர் தெளித்தனர். அதன் பிறகு அவர் மயக்கத்திலிருந்து தெளிவடைந்தும் குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 100farmmmm

  100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?

 • train4

  கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!

 • mars-4

  செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!

 • hgoteell__sss

  தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!

 • 04-03-2021

  04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்