சொத்தை அபகரித்த மகன் மீது நடவடிக்கை கோரி கலெக்டர் அலுவலகம் முன் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தி அறிவுரை
1/26/2021 4:57:28 AM
பெரம்பலூர், ஜன.26: தனது சொத்தை அபகரித்த மகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க மண்ணெண்ணெய் கேனு டன் வந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், எசனை, கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி செல்லம்மாள் (70). செல்லம்மாளின் கணவர் கிருஷ்ணமூர்த்தி இறந்து 25 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் விவசாயக் கூலி வேலை செய்து வரும் செல்லம்மாளின் வீடு மற்றும் நிலத்தை இவரது மகன் செல்வராஜ் அபகரித்து விட்டதாகவும், அந்த நிலத்தை மீட்டுத் தரவேண்டுமென பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தற்கொலை போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளார். இதற்காக செல்லம்மாள் நேற்று காலை 5 லிட்டர் மண்ணெண் ணெய் கேனுடன் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்திருந்தார். இதனை கலெக்டர் அலுவலக பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்துவிட்டு வேகமாக ஓடிச்சென்று மூதாட்டி கொண்டுவந்த மண்ணெ ண்ணைக் கேனைப் பறிமுதல் செய்தனர். பிறகு செல்லம்மாளுக்கு அறிவுரைகள் கூறி, அவரது கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகம் முன்புள்ள மனுக்கள் பெட்டியில் போட்டுவிட்டு போகச் சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இத னால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
நகராட்சி ஆணையர் தகவல் செலவின கண்காணிப்பு தொடர்பாக வங்கி மேலாளர்களுடன் தேர்தல் அலுவலர் ஆலோசனை
ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் சட்டமன்ற தேர்தல் எதிரொலி மதுபானம் கடத்தல், பதுக்கி விற்றால் செல்போனில் புகார் தெரிவிக்கலாம்
மொபட்டில் சென்றபோது பெண்ணிடம் நகை பறித்தவர் கைது
நிதி ஒதுக்கி 10 மாதங்களுக்கு பிறகு போக்குவரத்துக்கு இடையூறாக நுழைவு வாயில் கட்டும் பணி
தேர்தலில் போட்டியிட டெபாசிட் தொகைக்காக பிச்சை எடுக்கும் விவசாயிகள்
தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்க ராணுவப்படை, போலீசார் அணிவகுப்பு 2வது முறையாக நடந்தது
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!