திருவில்லி.யில் டிராக்டர் பேரணி முன்னாள் எம்பி போட்டி
1/26/2021 3:28:30 AM
திருவில்லிபுத்தூர், ஜன. 26: திருவில்லிபுத்தூரில் டிராக்டர் பேரணி திட்டமிட்டபடி இன்று நடைபெறும் என முன்னாள் எம்பி அழகிரிசாமி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் மாதக்கணக்கில் ேபாராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த பேரணியை விருதுநகர், திருவில்லிபுத்தூரில் அனைத்து விவசாய கூட்டமைப்பு சார்பில் இன்று காலை 10 மணியளவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக திருவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து தெற்கு ரதவீதி ஸ்டேட் வங்கி வரை டிராக்டர் பேரணி நடத்த அனைத்து விவசாய கூட்டமைப்பு சார்பில் நகர் காவல்நிலையத்தில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்பி அழகிரிசாமியிடம் கேட்டதற்கு, இந்த டிராக்டர் பேரணி விவசாயிகளுக்கு ஆதரவானது. எனவே, இன்று திட்டமிட்டபடி இந்த பேரணி நடைபெறும் என தெரிவித்தார். போலீசார் அனுமதி மறுத்துள்ள நிலையில் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் திருவில்லிபுத்தூர் நகரில் பரபரப்பு ஏற்பட்