மானிய விலை சிமென்ட் கிடைப்பதில் சிக்கல் பாதியில் நிற்கும் கட்டிட பணிகள்
1/26/2021 3:23:32 AM
உத்தமபாளையம், ஜன.26: உத்தமபாளையம் பகுதியில் அம்மா சிமென்ட் கிடைக்காமல் கட்டிட வேலைகளை பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. உத்தமபாளையத்தில், அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தாலுகா அளவில். உத்தமபாளையம். உ.அம்மாபட்டி, ராமசாமி நாயக்கன்பட்டி, கோகிலாபுரம் உள்ளிட்ட பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள், வீடுகள் கட்டும் போது மானிய விலையில் அம்மா சிமென்ட் வாங்கி செல்கின்றனர். இந்த சிமென்ட் ஒரு மூடை ரூ.216 என விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கடந்த 3 மாதமாக நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு, மானிய விலையில், வரக்கூடிய அம்மா சிமென்ட் வருவதில்லை.
இதனால் கட்டிடப் பணிகள் பாதியில் நிற்கின்றன. மிகவும் கஷ்டப் படக்கூடிய, குடும்பங்கள் தினந்தோறும் உத்தமபாளையத்தில் உள்ள குடோனுக்கு வந்து, தங்களுக்கு சிமென்ட் வந்துவிட்டதா என கேட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனால் வெளி மார்க்கெட்டில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை நிலவுகிறது. இரண்டு மூன்று மாதங்களுக்கு மேலாக அம்மா சிமென்ட் சப்ளை இல்லை என கைவிரிக்கின்றனர். தேனி மாவட்டத்தில் தற்போது அம்மா சிமென்ட் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ஆண்டிபட்டி அருகே மாயமான மின்வாரிய ஊழியரை கண்டுபிடித்து தர உத்தரவு
டாஸ்மாக்கில் தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கை
தேனி அருகே ஓலைச்சுவடிகள் கண்டுபிடிப்பு
தமிழ் வழியில் படித்த உறுதி சான்று வழங்க பணம் சிஇஓவிடம் புகார்
காமயகவுண்டன்பட்டி அருகே டெங்கு விழிப்புணர்வு
தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சைகை மொழி பெயர்ப்பாளர் வீடியோ காலில் வர வேண்டும்
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!